Thursday, January 20, 2005

ஏன் மது அருந்தக் கூடாது?

நான் இதுவரை குடித்த பீர்களை எண்ணி சில சமயம் வெட்கம் அடைகிறேன். ஆனால், பீர் அருந்தும் குடுவையை (pitcher) பார்க்கும்போது, இந்த பீரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களும், அவர்களுடைய நம்பிக்கைகளும், கனவுகளும் நினைவுக்கு வந்து, நான் இந்த் பீரை அருந்தாவிடில், அவர்கள் வேலையை இழந்து விடுவார்களே என்ற கவலை ஏற்பட்டு விடுகிறது! "அத்தொழிலாளர்களின் கனவுகள் நனவுகளாக இந்த பீரை அருந்துவதை விடுத்து எனது கல்லீரலைப் பற்றி மட்டும் சுயநலமாக சிந்திப்பது தவறவல்லவா?" என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டு விடுகிறேன்!
--- Jack Handy


நான் குடிக்காதவர்களை கண்டு வருத்தமடைகிறேன்! அவர்கள் காலையில் விழிக்கும்போது எவ்விதம் உணருகிறார்களோ, அவ்விதமே நாள் முழுதும் உணரவிருப்பதைக் கண்டு!
--- Frank Sinatra


முட்டாள்களுடன் நேரம் செலவிடுவதற்காக ஒரு புத்திசாலி, சில சமயங்களில், அதிகம் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறான்!
--- Ernest Hemingway


குடிப்பதினால் உண்டாகும் கெடுதல்களைப் பற்றி படித்தவுடன், நான் படிப்பதையே நிறுத்தி விட்டேன்!
--- Henry Youngman


கடவுள் நம்மை விரும்புகிறார் என்பதற்கும், அவர் நாம் மகிழ்ச்சியாக இருக்க விழைகிறார் என்பதற்கும், மதுவே சிறந்த சாட்சி!
--- Benjamin Franklin


போதையுடன்,
ஒரு குடிகாரன்
(பாலா என்று தப்புக் கணக்கு போட வேண்டாம்!)

8 மறுமொழிகள்:

Moorthi said...

ஹிஹிஹி....

Pavals said...

மது மிகவும் தீங்கானது..

தீயவைகள் அழிக்கப்படவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது
நான் வேதத்தின் படி நடப்பவன்...
அதனால் தான் மதுவை குடித்தே அழிக்கிறேன்..

எனக்கு வந்த ஒரு SMS இது...

சங்கரய்யா said...

பாலா,
போதை அதிகமோ??!!

ROSAVASANTH said...

உமர் கய்யாம்
How much more of the mosque, of prayer and fasting?
Better go drunk and begging round the taverns.
Khayyam, drink wine, for soon this clay of yours
Will make a cup, bowl, one day a jar.

When once you hear the roses are in bloom,
Then is the time, my love, to pour the wine;
Houris and palaces and Heaven and Hell-
These are but fairy-tales, forget them all.Drink wine, for long you’ll sleep beneath the soil,
Without companion, lover, friend or mate.
But keep this sorry secret to yourself:
The withered tulip never blooms again.
....

I need a jug of wine and a book of poetry,
Half a loaf for a bite to eat,
Then you and I, seated in a deserted spot,
Will have more wealth than a Sultan's realm".

from Rubaiyat:

யோசிப்பவர் said...

பதிவு நல்லார்க்குமா(ஆமா! பதிவயெல்லாம் வூட்ல படிக்க மாட்டாங்ளா?)

enRenRum-anbudan.BALA said...

மதுவுக்கு இத்தனை ரசிகர்களா? பலே! பலே!

ரோசா வசந்த்,
நீங்கள் மேற்கோள் காட்டிய இருவரையும் படித்திருக்கிறேன். Lovely quotes, really!

ராசா, "வேத" ராசா, வாங்கய்யா, வாங்க!

சங்கரய்யா,
என்ன நக்கலா, நண்பரே?

யோசிப்பவரே,
இதை எழுதிய பின், இப்போது தான் (அலுவலகத்திலிருந்து) வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் :-( நாளை சொல்கிறேன்!

மூர்த்தி,
Steady தானே?

என்றென்றும் அன்புடன்
பாலா

அன்பு said...

இந்தப்பக்கத்தை (எதற்கும்) விருப்பமானவைகளில் சேர்த்து வைத்துக்கொள்கிறேன்:)

enRenRum-anbudan.BALA said...

அன்பு,
தங்களின் ஊக்கத்திற்கு என் நன்றிகள் ;-)
இப்பதிவை இப்போது தான் படிக்கிறீர்களா என்ன ???
என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails